சினிமா

அடேங்கப்பா! சாட்டை படத்தில் பள்ளிமாணவியாக வந்தவரா இது.! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்!!

Summary:

sattai mahima latest photo viral

சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியாகி அணைத்து விதமான ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் சாட்டை. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மஹிமா நம்பியார்.

அந்த படத்தினை தொடர்ந்து என்னமோ நடக்குது, குற்றம் 23, கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 

இந்த படங்களை தொடர்ந்து மஹிமா மதுரராஜா, ஐங்கரன், கிட்னா, அசுர குரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிறகு கதாநாயகனாக நடித்து வரும் அசுர குரு படத்தினை இயக்குனர் ராஜாத் ரவிசங்கர் இயக்கி வருகிறார். திரில்லர் கதையாக உருவாக்கி வரும் இந்த படத்தில் மஹிமா முக்கியமான கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார்.

இதுவரை மிகவும் சாதுவான கதாபாத்திரங்களில் நடித்துள்ள மஹிமா இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் பலவிதமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பைக் ஓட்டுதல், சிகிரெட் பிடித்தல் என ஆண்களுக்கு இணையாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மஹிமா தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ரெட்டைச்சடையில் பள்ளிமாணவியாக வந்தவாரா இது என ஷாக்காகியுள்ளனர்.


 


Advertisement