நடிகர் சத்யராஜின் அழகான மனைவியை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் அரிய குடும்ப புகைப்படம்!!sathyaraj-old-family-photo-viral

தமிழ் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்து பின்பு ஹீரோவாக அவதாரமெடுத்து தொடர்ந்து எக்கசக்கமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து 80ஸ் காலக்கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். வில்லனாக பார்ப்போர் மிரளும் வகையிலும், ஹீரோவாக நக்கல், காமெடி மற்றும் காதலில் அசத்த கூடியவராகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்துவார். நடிகர் சத்யராஜ்க்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 

மேலும் அவர் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக இவரது நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி. அவர்களுக்கு சிபிராஜ், திவ்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

சிபிராஜ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். மற்றும் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இந்த நிலையில் சத்யராஜ் அவரது மனைவி மற்றும் மகன், மகளுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sathyaraj