காமெடி நடிகர் சதீஷ்க்கு அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! செம குஷியில் வாழ்த்தும் ரசிகர்கள்!!Sathish going to act as hero in 2 movie

தமிழ் சினிமாவில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளிவந்த ஜெர்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சதீஷ். மேடை நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறக்கிறார்.

நடிகர் சதீஷ் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் திரைப்படங்களிலும் தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். இவ்வாறு அனைவரையும் சிரிக்க வைத்து இப்போது முன்னணி காமெடி நடிகர்களின் வரிசையில் இருக்கும் சதீஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Sathish

இந்த நிலையில் சதீஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி அவர் மற்றொரு படமொன்றிலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்தாக இரு படங்களில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் சதீஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.