காமெடி நடிகர் சதீஷை ட்விட்டரில் வச்சு செய்துள்ள ரசிகை! வீடியோ!

Sathish fan made patchaa audio for him


Sathish fan made patchaa audio for him

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் சதீஷ்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவரும் நடிகர் சதிஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துளார் அவரது ரசிகை ஒருவர். அதாவது பாட்சா படத்தில் நடிகை நக்மா சூப்பர் ஸ்டாரை பார்த்து நீ நடந்தால் நடை அழகு, நீ பேசும் பேச்சளகு என ஒரு பாடலை பாடியிருப்பார்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷின் ரசிகை ஒருவர் அந்த பாடலை நடிகர் சதீஷின் விடியோவுடன் சேர்த்து அவரை பார்த்து அந்த பாடலை பாடியுள்ளதுபோல எடிட் செய்து சதீஷின் டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்த்த நடிகர் சதீஷும், இது சுத்த பொய்யாக இருந்தாலும் மிகவும் நன்றி என பதில் அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ.