தொடங்கியது சர்க்கார் டிக்கெட் புக்கிங்; எக்ஸ்பிரஸ் வேகத்தில் நிரம்பும் முன்பதிவு!

தொடங்கியது சர்க்கார் டிக்கெட் புக்கிங்; எக்ஸ்பிரஸ் வேகத்தில் நிரம்பும் முன்பதிவு!


sarkar ticket booking opens today

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், சமீபத்தில் கதை திருட்டு தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

sarkar ticket booking opens today

இந்நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று சர்க்கார் வெளியாகும் என உறுதியாகிவிட்டது. படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் படத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் மிக விரைவாக நிரம்பி வருகிறது.