சர்க்கார் தீபாவளிக்கு வெளியாவதில் புது சிக்கல்! எப்போ ரிலீஸ் தெரியுமா?Sarkar release date and latest updates from sarkar movie

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரத்தம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை என ஒருபுறம் பிரச்னை போய்க்கொண்டிருக்க வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Sarkar movie

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சர்க்கார் படம் திரைக்கு வரலாம் என செய்திகள் வெளியாக்குகின்றன. அதாவது தீபாவளிக்கு முந்தைய வெள்ளி அந்தற்றே படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதில் வெள்ளிக்கிழமை படம் வெளியானால் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே படம் வெள்ளிக்கிழமை வெளியாகுகிறதா அல்லது தீபாவளி அன்று வெளியாகுகிறதா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை.