சினிமா

படம் வருமா வராதா? சர்க்கார் கதை திருட்டு! அதிரடி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்!

Summary:

Sarkar movie update and release date

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரத்தம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை என ஒருபுறம் பிரச்னை போய்க்கொண்டிருக்க வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தனது செங்கோல் என்னும் கதையை திருடி முருகதாஸ் சர்க்கார் என்ற பெயரில் படமாக எடுத்துவருவதாக இயக்குனர் முருகதாஸ் மீது உதவி இயக்குனர் இருவர் புகார் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் சர்க்கார் கதையும், செங்கோல் கதையும் ஒன்றாக இருப்பதாக கூறினார். ஆனால் இதை முருகதாஸ் ஏற்க மறுத்தார். இந்நிலையில் சர்க்கார் படத்தினை தடை செய்ய வேண்டும் என துணை இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவசர வழக்கா தொடரப்பட்ட இந்த வழக்கை என்றுகொண்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்த தீர்ப்பில் சர்க்கார் படத்திற்கு தடை விதிக்கமுடியாது என அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இதனால் எதிர்பார்த்தபடி தீபாவளி அல்லது அதற்கு முன்னதாகவே சர்க்கார் திரைப்படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement