சினிமா

தினம் தினம் புது புது சாதனை படைக்கும் சர்க்கார்! இன்னைக்கு என்ன சாதனை தெரியுமா?

Summary:

Sarkar movie is top trending in google search

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று சர்க்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

படம் முழுவதும் அரசியல் என்பதால் படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்க்கு கிளம்பியுள்ளது. படத்தின் மய்ய கருவே அரசியல் பற்றியும், ஒவொரு வாக்காளரின் உரிமையை பற்றியதும்தான். இந்த படத்தில் கள்ள ஒட்டு குறித்து பல விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதில் முக்கியமாக படத்தில் 49P என்ற இந்திய அரசியல் சாசன சட்டத்தை பற்றி மிகவும் அழுத்தமாக சொல்லபட்டுள்ளது.

அரசியல் சாசன சட்டத்தில் நாம் அனைவருக்கும் 49-0 அதாவது நோட்டா என்ற ஒரு சட்டம் இருப்பது தெரியும். ஆனால் 49-P என்ற ஒரு சட்டம் இருப்பது நாம் அனைவர்க்கும் பொதுவாகா தெரியாத ஒரு சட்டம். சர்கார் படத்தில் 49-p என்ற சட்டம் இருக்கிறது, அந்த சட்டத்தை வைத்து ஒருவரின் ஒட்டு கள்ள வோட்டாக போடப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து தகுந்த ஆதாரத்துடன் மீண்டும் வாக்களிக்கலாம்.

இதனால் படம் வெளியான பின்னர் பல பேர் கூகுளில் 49P என்ற வார்த்தையை தேடியுள்ளனர். அது கூகுள் தேடலில் ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது. 


Advertisement