தமிழகம் சினிமா

முடிவுக்கு வந்தது சர்க்கார் கதை திருட்டு. தப்பை ஒத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.

Summary:

sarkar movie - a.r murukadoss - director

சர்க்கார் படத்தின் கதை துணை இயக்குனர் வருண் இராஜேந்திரனுடைய கதைதான் என்று 
சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஒத்துக் கொண்டுள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படம் சர்க்கார். இந்த நிலையில் இப்படத்தின் கதையானது செங்கோல் என்னும் படத்திலிருந்து எடுக்கப்பட்டதாக படத்தின் துணை  இயக்குனர் வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதிக்குள் முருகதாஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில்,இன்று இந்த வழக்கு   நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநர் முருகதாஸ் மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளது மேலும், ’சர்கார்’ பட துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று  நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார்.


 


Advertisement