சினிமா

"#Sarkar HD Print Coming" - சர்ச்சையை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்ன் அதிரடி ட்வீட்!

Summary:

sarkar in tamil rockers

தமிழ் திரையுலகத்தினருக்கு மிகப்பெரும் சவாலாக செயல்பட்டுவருவது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். எந்த ஒரு படத்தையும் வெளியாகும் அன்றே இணையத்திலும் வெளியிட்டு பீதியை கிளப்புகின்றனர் தமிழ் ராக்கர்ஸ்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே "#Sarkar Coming Soon" என ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். இந்நிலையில் சர்க்கார் படத்தினை இணையத்தில் வெளியிட தடைகள் விதிக்கப்பட்டன.

அப்படி இருந்தும் இதை பற்றி எதையும் பொருட்படுத்தாமல் இன்று மீண்டும் தமிழ் ராக்கர்ஸ் சார்பாக "#Sarkar HD Print Coming" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் தமிழ் ராக்கர்ஸ்-ஐ விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சர்க்கார் படத்தை திரையரங்குகளில் பார்க்க விஜய் ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதே வேளையில் தமிழ் ராக்கர்ஸ்-ல் எப்படியும் HD பிரிண்ட் வந்துவிடும் என்ற நம்பிக்கையிலும் பலர் காத்துருகின்றனர்.
 


Advertisement