சினிமா

அடேங்கப்பா! சர்க்கார் படத்தின் முதல்நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Summary:

Sarkar first day collection details

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் சர்க்கார். படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் இன்று நிலவும் சூழலுக்கு ஏற்றப்படம் என அனைவரும் சர்க்காரை புகழ்கின்றனர். எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற்றுள்ளது சர்க்கார் திரைப்படம்.

சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை எனவும், வருண் ராஜேந்திரன் என்பவரது செங்கோல் கதையை திருடி முருகதாஸ் சர்க்கார் படத்தை எடுத்துவருவதாகவும் செய்திகள் வந்தது. பின்னர் இருவரும் சமரசமாக பேசி ஒருவழியாக நேற்று சர்க்கார் படம் வெளியானது.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளான இன்று எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்பது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுவதாவது:

“திரையரங்கத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக ரூ.1500 வரை சில இடங்களில் வசூலிக்கப்பட்டது. இதனால் தமழகத்தைப் பொறுத்தவரை சுமார் 15 கோடி ரூபாய் இன்று வசூலாகியிருக்கும். ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்திருந்தால் இதில் பாதி கூட தேறாது.

இன்றைய வசூலைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால் நாளை முதல் என்ன நிலவரம் என்பது அவர்களுக்கு கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களிலும் இது பகிரப்படுகிறது. ஆகவே இன்று ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நாளை இருக்குமா என்பது சந்தேகமே.


Advertisement