சினிமா

ரஜினியின் சாதனையை ஒரே நாளில் சரித்த சர்க்கார்! தெறிக்கவிடும் வசூல் நிலவரம்!

Summary:

Sarkar beats rajinis kala first day collection in chennai

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த ‘சர்கார் ‘ படம் தீபாவளி திருநாளான நேற்று (நவம்பர் 6)உலகெங்கும் உள்ள 3500 திரையரங்கிற்கு மேல் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

திருட்டு கதை விவகாரம் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, படம் முழுவதும் அரசியல் என்பதால் படம் வருமா வராதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஒருவழியாக திருட்டுக்கதை விவகாரம் சமரசமாக பேசி முடிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வெளியானது சர்க்கார் திரைப்படம். கலவையான விமர்சங்கங்கள் வந்தாலும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது சர்க்கார் திரைப்படம்.

சர்க்கார் திரைப்படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சர்கார் திரைப்படம். இதற்கு முன்பாக ரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஒரே நாளில் 1.76 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement