சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
71 வயதிலும் ஃபிட்னஸ் மூலம் ரசிகர்களை ஊக்குவிக்கும் சரத்குமார் ! ஜிம் வீடியோ வைரல்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார், வயது 71 ஆனபோதும் தனது உடல்நலத்தையும் உடல் கட்டமைப்பையும் சிறப்பாக பராமரித்து வருகிறார். சரத்குமார் உடற்பயிற்சி குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
ஜிம் வீடியோ வைரல்
சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் Back Muscle வலுப்படுத்தும் ஜிம் பயிற்சியின் வீடியோவை சரத்குமார் பகிர்ந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக வைரலாக, அவருடைய உடல்வாகு மற்றும் உற்சாகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரின் கட்டுப்பாடு மற்றும் உறுதியான மனநிலை பலருக்கு ஊக்கமாக மாறியுள்ளது.
உடற்கட்டுப் பயணம்
1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டத்தை வென்ற பாடி பில்டர் என்ற பெருமை சரத்குமாருக்கு உண்டு. தற்போதைய உடல் கட்டமைப்பு, அந்த காலத்தையும் மிஞ்சும் வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். சினிமாவில் அவர் நடித்த ஆக்ஷன் கதாபாத்திரங்களில் ஃபிட்னஸ் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.
இதையும் படிங்க: வரலட்சுமி விரத பூஜையில் அஜித்தின் காலில் விழுந்த ஷாலினி! அடுத்த நொடியே அஜித் சொன்ன வார்த்தை! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ...
திரைப்படங்களில் பிஸியான சரத்குமார்
இந்த ஆண்டில் ‘நெசிப்பாயா’, ‘நிலவுக்கு என் மேலென்னடி கோபம்’, ‘3 BHK’ போன்ற தமிழ் படங்களிலும், ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜயந்தி’, ‘கண்ணப்பா’ போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சரத்குமார் நடித்துள்ள ‘அடங்காதே’ திரைப்படம் ஆகஸ்ட் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சரத்குமாரின் ஃபிட்னஸ் வீடியோ ரசிகர்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதோடு, அனைத்து தலைமுறையினருக்கும் உடற்பயிற்சி செய்வதில் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.
ஆணழகன் சரத்குமார் 🔥
இந்த வயசுலயும் உடம்பை கெத்தா மெயின்டைன் பண்றாரு 👌
ஸ்கூல் படிக்கும் போதே ஜிம்முக்கு போக காரணம் நம்ம நாட்டாமை தான். ஊரெல்லாம் அப்ப அவர் பேச்சு தான்.
அப்புறம் நம்ம தில் சீயான் விக்ரம் தான் Inspiration 💪#Vikram #Sarathkumar
pic.twitter.com/DEFmGPLyr1— Make An Offer (@_makeanoffer) August 20, 2025
இதையும் படிங்க: வேற லெவல்.... தவெக மாநாட்டில் விஜய் தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்! வீடியோவை வெளியிட்ட விஜய்! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ....