சந்தானத்திற்கு ஜோடியாகும் பிரபல முன்னணி சீரியல் நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள்.

சந்தானத்திற்கு ஜோடியாகும் பிரபல முன்னணி சீரியல் நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள்.


Santhanam  next movie heroin famous serial actress sana

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

Santhanam

மேலும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான A1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் சந்தானம் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஹுரோயினாக பிரபல முன்னணி இந்தி சீரியல் நடிகை சனா மக்புல் தேர்வாகியுள்ளார். இவர் பல இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ரங்கூன் படத்திலும் நடித்துள்ளார்.