அடக்கொடுமையே! சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தோட தலைப்பை பார்த்தீர்களா!! ஷாக்கான ரசிகர்கள்!!

அடக்கொடுமையே! சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தோட தலைப்பை பார்த்தீர்களா!! ஷாக்கான ரசிகர்கள்!!



santhanam-nex-movie-title-released

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

Santhanam

மேலும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான A1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக உருவாக உள்ள சயின்ஸ்-பிக்‌ஷன் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு டிக்கிலோனா என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.