நடிகர் சந்தானத்தின் 'கிக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!Santhanam in kick movie release date announced

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி, படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். அதன்படி பல முன்னணி நடிகர்களுடன் சந்தானம் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகராக புகழ் பெற்றார்.

Santhanam

இதனையடுத்து சமீப காலமாக ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.

Santhanam

மேலும் இந்த படத்தில் பிரம்மானந்தம், தம்பி ராமையா, மனோபாலா, செந்தில், ஷகிலா, கூல் சுரேஷ், ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.