அடேங்கப்பா! நம்ம சந்தானத்திற்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா.! வெளியான செம மாஸ் தகவல்!!

அடேங்கப்பா! நம்ம சந்தானத்திற்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா.! வெளியான செம மாஸ் தகவல்!!


santhanam got 2 heroine in next movie

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

Santhanam

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் A1 என்ற திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து திரைக்கு வந்தது. அதனை தொடர்ந்து சந்தானம் ஜெயம் கொண்டான்,  கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக A1 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி மற்றும் மிஸ் கர்நாடகா பட்டம் பெற்ற சுவாதி முப்பலா இருவரும் நடிக்க உள்ளனர். 

 இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.