42 வயதில் முதன்முறையாக, தனது அழகிய மகளின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!Sangavi post daughter photo

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சங்கவி. அதனை தொடர்ந்து அவர் ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். 

 நடிகை சங்கவி தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் கோகுலத்தில் சீதை, சாவித்ரி என சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

Sangavi

இதனைத் தொடர்ந்து 38 வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு  தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 42 வயதில் சங்கவி தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை அவர் சமீபத்தில் முதல்முறையாக   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sangavi