சினிமா

விஜய் தான் வருங்கால சூப்பர் ஸ்டார் - புகழ்ந்து தள்ளிய விஜய் பட நடிகை!

Summary:

விஜய் sangavi

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஒரு முன்னணி நடிகர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய சாதனைகள் படைக்கும்.

 தற்போது விஜயின் 63 வது படமாக  அட்லீ இயக்கும் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அந்த படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்து வருகிறது, கண்டிப்பாக படம் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக கோயமுத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா, ரசிகன், விஷ்ணு என நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சங்கவி.

தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சங்கவி விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் இன்றைய சூப்பர் ஸ்டார் விஜய் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்றால் அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் காரணம் என கூறியுள்ளார்.


Advertisement