சினிமா வீடியோ

பிகில் ஸ்டைலில் வெறித்தனத்துடன் சாண்டி செய்த காரியத்தை பார்த்தீர்களா.! இணையத்தையே கலக்கும் வீடியோ

Summary:

sandy play football like bigil movie

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் 105 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.

 சாண்டி பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். மேலும் அவர் இருக்குமிடத்தில்  எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி தனது பிக்பாஸ் நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், பிக்பாஸ் கொண்டாட்டம் என செம பிஸியாக இருந்தார். மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். 

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் தற்போது பிகில் பட ஸ்டைலில் வெறித்தனத்துடன் கால்பந்து ஆடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் பேக் டு கேம் வெறித்தனம் எனவும் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

Back to game 🔥

A post shared by SANDY (@iamsandy_off) on


 


Advertisement