சினிமா

குருநாதா..தனது மனைவியுடன் சென்று நேரிலேயே சந்தித்த சாண்டி.! மாஸ் புகைப்படத்தால் அசந்துபோன நெட்டிசன்கள்!! .

Summary:

Sandy meet his dance guru kalamaster

பிக்பாஸ் சீசன் மூன்று  கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும்  கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்திற்கு தேர்வாகினர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்த நிலையில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.

 பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் லைக்குகளையும் குவித்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தனது கலகலப்பான குணத்தால் அனைவரையும் கவர்ந்தவர் நடன இயக்குனர் சாண்டி.

 பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி சமீபத்தில் தனது நடன குருவாகிய கலா மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

 


.


Advertisement