மருத்துவமனையில் பரிதாபநிலையில் சிகிச்சை பெற்றுவரும் பிக்பாஸ் தர்சனின் காதலி.! புகைப்படத்தை கண்டு சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிக்பாஸ் சீசன் மூன்று இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 99 நாட்களை கடந்துள்ள சீசன் 3 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. மேலும் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, ஷெரின், முகேன் ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்த தர்ஷனின் காதலி நடிகை சனம்ரெட்டி. அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தர்சனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதில் டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இப்போது அதற்காக சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே உங்களது உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.