சினிமா

பிரபல தொலைக்காட்சியை வேதனையோடு, வச்சு செய்த சமுத்திரக்கனி.! எதற்காக தெரியுமா?

Summary:

samuthirakani talk about sattai movie

தமிழ் சினிமாவில் இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சாட்டை. நல்ல கருத்துக்களால் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆனநிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அடுத்த சாட்டை என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை திலகவதி ஐபிஎஸ் அவர்களின் மகன் பிரபு திலக் தயாரித்துள்ளார். மேலும் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகனே இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய படம்

 இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, சசிகுமார், அதுல்யா ரவி ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

 அப்போது பேசிய சமுத்திரக்கனி, சாட்டை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது ஆனால் அப்படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் சாட்டை படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி வாரம்தோறும் அப்படத்தை ஒளிபரப்பி நன்றாக சம்பாதிக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 


Advertisement