சினிமா

ஏகப்பட்ட சிக்கல்கள்! நேரடியாக விஜய் டிவியில் ரிலீசாகும் பிரபல முன்னணி நடிகரின் படம்!! அதுவும் எப்போது தெரியுமா??

Summary:

பூவரசம் பீப்பி, சில்லுக் கருப்பட்டி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ஹலிதா ஷமீம்

பூவரசம் பீப்பி, சில்லுக் கருப்பட்டி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ஹலிதா ஷமீம். இவர் அடுத்ததாக ஏலே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்று பிப்ரவரி 12 தியேட்டரில் ரிலீசாக இருந்தது. மேலும் படம் வெளியான 30 நாட்களுக்குள்ளேயே ஓடிடியில் வெளியிடவும் தயாரிப்பு குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்தை தியேட்டரில் ரிலீசான 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடுவோம் என்ற ஒப்புதல் கடிதத்தையும் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இவ்வாறு இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், தயாரிப்பு குழு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சில ஆச்சர்யமான புதிய விதிகளாலும், தவிர்க்கமுடியாத காரணங்களாலும் 'ஏலே' படத்தை எங்களால் தியேட்டரில் திரையிட முடியவில்லை. இந்தப் படத்தை பிப்ரவரி 28-ம் தேதி மதியம் 3 மணிக்கு நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement