வேறலெவல்தான்.. ஒரு கையில் ட்ரிப்ஸ் ஊசி.! விடாமுயற்சியுடன் சமந்தா செய்த காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்!!

வேறலெவல்தான்.. ஒரு கையில் ட்ரிப்ஸ் ஊசி.! விடாமுயற்சியுடன் சமந்தா செய்த காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்!!


Samantha workout video viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

நடிகை சமந்தா தற்போது ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவான இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார, உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா அண்மையில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக் கூறி வந்தனர்.

நடிகை சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நிலையிலும், விடாமுயற்சியுடன் போராடி வந்துள்ளார். ஒரு கையில்  வென்ப்லான் என்ற ட்ரிப் ஏற்றும் ஊசியுடன் ஒற்றை கையால் மட்டும் கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, மிகவும் கடினமான காலத்திலும் தனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்திய ஜிம் பயிற்சியாளருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.