சினிமா

அந்த ட்ரைலரை பார்த்து கண்கலங்கிட்டேன்! நெகிழ்ந்துபோய் பிரபல நடிகரை வாழ்த்திய சமந்தா!

Summary:

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெ

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்துள்ளார். மேலும் அவரே அதில் விஞ்ஞானியாகவும் நடித்துள்ளார்.

நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில்  முதன்மையானவராக செயல்பட்டவர். இவரை 1994 ஆம் ஆண்டு ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு கொடுத்ததாக மத்திய புலனாய்வுத்துறை கைது செய்தது. இதனால் வேலையை எழுந்து சிறை தண்டனை அனுபவித்த அவரை சில ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் பெரும் மன உளைச்சல் அடைந்த அவரது வாழ்க்கை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என 5 மொழிகளில் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல பிரபலங்களும் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த ட்ரெய்லரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நடிகை சமந்தா, நான் கடந்த ஒரு வருஷத்திற்கு முன்பே இந்த ட்ரைலரை பார்த்துவிட்டேன். அப்பொழுதே என் கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.


Advertisement