சினிமா

அந்த விஷயத்தால பலநாள் இரவு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்! ஆனா இப்போ.. லைவ்வில் உண்மையை உடைத்த சமந்தா!

Summary:

நடிகை சமந்தா சமூகவலைதளத்தில் லைவ் சாட்டில் மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ்களை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா,தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.

மேலும் சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுன் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்வாக அவர்களது  கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் , இணையத்தில் வரும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? எனக் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா முன்பெல்லாம் அதைப் பார்க்கும்போது தூக்கமே வராது. பலநாள் இரவு முழுவதும் அதையே யோசித்து வருத்தப்படுவேன். இப்பொழுதெல்லாம் அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக் கூறியுள்ளார்.


Advertisement