நடிப்பில் மட்டுமில்லை, படிப்பிலும் அவர் டாப்தான்! இணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் ரிப்போர்ட் கார்டு!

நடிப்பில் மட்டுமில்லை, படிப்பிலும் அவர் டாப்தான்! இணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் ரிப்போர்ட் கார்டு!


Samantha rank card photo viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம்,விஷால் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக  உள்ளார். இந்த நிலையில் அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகனும், பிரபல நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான  படங்களில் நடித்து வருகிறார்.

samantha

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா குறித்து வெளியான பதிவால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என விளக்கமளித்தார். இவ்வாறு சமந்தாவால் சமூக வலைதளமே  பிசியாக இருக்கும் நிலையில், தற்போது அவரது பள்ளி ரிப்போர்ட் கார்டு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில் அனைத்து பாடங்களிலும் சமந்தா டாப் மதிப்பெண்களை பெற்றுள்ளார். அந்த புகைப்படம் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் சமந்தா நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் டாப்தான் என பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.