சினிமா

திரிஷாவை புகழ் மழையில் நனைத்த சமந்தா; எதற்காக தெரியுமா?

Summary:

samantha praises trisha for 96

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரின் பள்ளி பருவத்தை நினைவூட்டும் இந்த திரைப்படம் பலரின் மனதில் நீண்ட நாட்களாக நீடிக்கக்கூடிய ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது.

இந்த படத்திற்கு திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைப்பற்றி பதிவிட்டிருந்த நடிகை சமந்தா திரிஷாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

trisha in 96 க்கான பட முடிவு

சமந்தா அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, "நான் 96 படம் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு, என்னால் நம்பவே முடியவில்லை. உங்களை எப்படிப் புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை. உங்களுடைய நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. நடிப்பில் நீங்கள் மாமேதையாக திகழ்கின்றீர்.

இப்படி ஒரு கடினமான கதாபாத்திரத்தில் நீங்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்! இதேபோல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுங்கள்" என்று பாராட்டியுள்ளார்.அதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா உங்களுடைய பாராட்டிற்கு மிக மிக நன்றி என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement