நீங்க இல்லாம என்ன செய்வேன்? உருகிய நடிகை சமந்தா! யார் அந்த இரு நடிகர்கள் பார்த்தீங்களா!!

நீங்க இல்லாம என்ன செய்வேன்? உருகிய நடிகை சமந்தா! யார் அந்த இரு நடிகர்கள் பார்த்தீங்களா!!


samantha-post-image-with-two-famous-actors

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அதனை தொடர்ந்து சமந்தா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.

samantha

அந்தப் பாடல் தற்போது செம ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, நடிகர்கள் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்? எனக் கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.