அட.. என்னதான்பா நடக்குது! வெடித்த விவாகரத்து விவகாரம்! செம கூலாக சமந்தா போட்ட மீம் போஸ்டால் குழம்பிய ரசிகர்கள்!samantha-memes-post-about-teasing-media

மீடியாக்களை விமர்சனம் செய்யும் வகையில் சமந்தா வெளியிட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் சமந்தா திருமணத்திற்கு பின் தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை ட்விட்டரில் தனது பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டார். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தனது பெயரை நீக்கி, வெறும் S என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் சமந்தாவிற்கும் அவரது கணவர் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

samantha

மேலும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தனது மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனாவுக்கு சமந்தா சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார். ஆனால் அதற்கு நன்றி தெரிவித்து நாகார்ஜுனா பதிலளிக்கவில்லை. இதனால் நாகார்ஜுனா சமந்தா மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் ஊடகங்களை விமர்சிக்கும் வகையில் ஆக்ரோஷமாக குறைக்கும் நாயின் புகைப்படத்தை ஊடகங்கள் என்றும், அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மீம் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.