இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவரா? வெளியான ஷாக் ஆதாரம்!!



sakshi-leave-from-bigboss-this-week

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

bigboss

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா  வெளியேறினார். 

அதனை தொடர்ந்து மூன்றாவதாக மோகன் வைத்யா மற்றும் கடந்த வாரம் பல சர்ச்சைகளை கிளப்பிய மீராமீதுன் ஆகியோர் வெளியேறினர். இதனை தொடர்ந்து மேலும் கவின் மற்றும் சாட்சியின் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி, பெரும் பிரச்சினைகள் வெடித்தது. இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

bigboss

இதில் கவின், மதுமிதா,  ரேஷ்மா,  சாக்ஷி, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் வோட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி சாக்ஷியே குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார். அதனால் இந்த வாரம் சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    bigboss