Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சாய்பல்லவி இதை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அவரே கூறிய தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்!!
சாய்பல்லவி இதை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அவரே கூறிய தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் அதனைத் தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சாய்பல்லவி தமிழில் கரு,மாரி2 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சாய்பல்லவி தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவான NGK என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து NGK படம் வரும் 31ஆம் தேதி ஆக உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் உங்களது ஹாண்ட்பேக்கில் என்னென்ன பொருட்கள் வைத்திருப்பீர்கள் என கேட்டதற்கு அவர் நான் எனது ஐடி, செல்போன் போன்ற எனக்கு தேவையான பொருட்களை வைத்திருப்பேன் மேலும் விபூதி பாக்கெட் ஒன்றை எப்பொழுதும் வைத்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
நடிகை சாய்பல்லவிக்கு விபூதி சாப்பிடும் பழக்கம் சிறு வயதிருந்து இப்போதுவரை உள்ளதாம். அதனால் தோணும்போது சாப்பிடுவதற்காக விபூதி பாக்கெட்டை எப்பொழுது வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.