சினிமா

படப்பிடிப்பில் செல்வராகவன் எப்படி! NGK சூட்டிங் அனுபவம் குறித்து சாய் பல்லவி அதிர்ச்சி தகவல்

Summary:

Sai pallavi revealed about selvaragavan in ngk

இயக்குனர் செல்வராகவன் சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு ஸ்டிரிக்ட்டாக நடந்து கொண்டார் என NGK படத்தின் ஒரு கதாநாயகி சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் NGK. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியாகவுள்ளது. 

சாய் பல்லவி முதல் முறையாக சூர்யாவுடன் இந்த பட்ததில் நடித்துள்ளார். தமிழில் சாய் பல்லவிக்கு இது மூன்றாவது படமாகும். இதற்கு முன்பு பெரிய அளவில் தமிழில் வெற்றிபெறாத சாய் பல்லவி தற்போது NGK படத்தின் ப்ரோமஷன் வேலையில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் செல்வராகவன் எப்படி இருந்தார் என்றும் வேலையில் அவரது தீவிரம், நேர்மையை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அவர் கடைபிடித்த விதிமுறைகள் பற்றி தெரிவித்துள்ளார். 

"படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே படப்பிடிப்பு தளம் மிகவும் அமைதியாக இருக்கும் என்றும், மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை, உறவினர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று இயக்குன்ர செல்வராகவன் மிகவும் கண்டிப்பாக கூறினார். மேலும் சிகை அலங்காரம், மேக்கப்பிற்கு மட்டும் ஒரே ஒரு உதவியாளர் வரலாம் என்றும், அதுவும் மேக்கப் முடிந்த உடனேயே அவர்கள் வெளியில் சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

படப்பிடிப்பில் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும் என்று ஆரம்ப்தில் நான் ஆச்சர்யபட்டேன். ஆனால் போக போகத் தான் படப்பிடிப்பு தளம் எப்படி அமைதியாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். நிஜத்தில் அவ்வளவு அமைதியாக இருந்தது" என சாய் பல்லவி கூறியுள்ளார். 


Advertisement