சினிமா லைப் ஸ்டைல்

 சூர்யாவின் மிகப்பெரிய ரசிகையான சாய் பல்லவி, தளபதி  விஜய் பற்றி   கூறும் பரபரப்பு  கருத்து !

Summary:

sai palavi talk about vijay

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விஜய் பற்றி தனது கருத்துகளை சாய் பல்லவி பகிர்ந்து கொண்டுள்ளார்.
மலையாளம் சினிமாவில் பிரேமம் திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த தான் சாய் பல்லவி .இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக 
உள்ளார். இவரது அழகு, நடிப்பு, நடனத்திற்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மருத்துவர் படிப்பை முடித்து, முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

sai palavi க்கான பட முடிவு
இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் இன்று வெளியானது. இதில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
செல்வராகவன் இயக்கத்தில் அரசியலைக் கதை கருவாகக் கொண்டு ‘என்.ஜி.கே’ உருவாகியுள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் #AskSaiPallavi என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்களிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 
அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை என்று தெரியும். விஜய் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி, ”நடிகர் விஜய் மக்களை ஈர்க்கும் வல்லமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement