என் இதயம் உடைஞ்சுருச்சு! முதியோர் இல்லம் கட்டணும்.. கண்ணீருடன் பிரபலம் வெளியிட்ட வேதனையான வீடியோ!!



S thaman wish to build new old age home

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றர். அதிலும் கீழ்தட்டு மக்கள் அவல நிலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவ்வாறு கஷ்டப்படும் பலருக்கும் நல்ல உள்ளங்கள் சிலர் உணவளித்து உதவி செய்து வருகின்றனர்.

S thaman

அவ்வாறு சமீபத்தில் நபரொருவர் வயதான பாட்டிக்கு உணவு மற்றும் தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பாட்டியிடம் உங்களுக்கு வேறு ஏதேனும் வேண்டுமா என அந்த நபர் கேட்க,அந்தப் பாட்டி தன் சுருக்குப் பையை திறந்து இந்த ரூவாய வச்சிக்க ஐயா என சில காசுகளை எடுத்துகொடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதனைக் கண்ட நடிகரும் இசையமைப்பாளருமான தமான், என் இதயம் இரண்டு துண்டாக உடைந்துவிட்டது. ஒரு முதியோர் இல்லம் கட்ட வேண்டும் என்ற ஒரு புதிய கனவு உருவாகியுள்ளது. அதை கட்டி முடிக்க கடவுள் எனக்கு சக்தியை கொடுப்பார் என்று நம்புகிறேன். இதை நான் கண்ணீருடன் பதிவிடுகிறேன். உணவை வீணாக்காதீர்கள். தேவையானவர்களுக்கு அதை கொடுங்கள். மனிதனாய் இருபோம் என்று பதிவிட்டுள்ளார்.