சினிமா

நடிகர் சுந்தர்ராஜன் காலமானாரா? தீயாய் பரவிய தகவல்! புகைப்படத்துடன் அவரது மகன் வெளியிட்ட பதிவு!

Summary:

rumour spread about sundararajan is dead

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் ஆர் சுந்தர்ராஜன்.  70 வயது நிறைந்த இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்ததாகவும் நேற்றுமுதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

 இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அசோக் சுந்தர்ராஜன் தனது தந்தை நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் சென்னையில் படப்பிடிப்பு ஒன்றில் உள்ளார். தயவுசெய்து யாரும் இதுபோன்ற வதந்திகளை, மீம்ஸ்களை பரப்ப வேண்டாம் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஆர் சுந்தர்ராஜன்க்கான பட முடிவுகள்

 மேலும் அதுமட்டுமின்றி தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர். சுந்தர்ராஜன் ரஜினிகாந்த் குறித்து மிகவும் கடுமையாக பேசியதால் அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். விழும் அதனைத் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரவி வருகிறது.


Advertisement