சினிமா

ஆத்தாடி..அவர்தானா இது! மேக்கப் இல்லாமல் ரோஜா சீரியல் ஹீரோயின் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!!

Summary:

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்த தொடர் செம்ம ஹிட்டாகி டிஆர்பியிலும் முன்னணியில் வந்து பெருமை சேர்த்தது. ரோஜா தொடரில் அர்ஜுனாக சிப்பு சூரியன் மற்றும் ஹீரோயின் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பிரியங்கா தெலுங்கில் வெளிவந்த அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் ரோஜா சீரியலில் நடித்த பிறகுதான் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஜா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோ போன்றவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ரோஜா சீரியல் ஹீரோயின்தானா இது! என ஷாக்காகியுள்ளனர்
 


Advertisement