அடேங்கப்பா.. 48 வயசுலயும் மாடர்ன் உடையில் என்னா ஸ்டைலு! இளம் ஹீரோயின்களையே பொறாமை பட வைக்கும் நடிகை ரோஜா!!

அடேங்கப்பா.. 48 வயசுலயும் மாடர்ன் உடையில் என்னா ஸ்டைலு! இளம் ஹீரோயின்களையே பொறாமை பட வைக்கும் நடிகை ரோஜா!!



roja-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து  பெருமளவில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

நடிகை ரோஜாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின்னர் அரசியலில் களமிறங்கிய ரோஜா ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

Roja

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் போட்டோ சூட் மற்றும் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது இளம் ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு செம ஸ்டைலாக,மாடர்னாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Roja

Roja