சினிமா

அரசியலை தெறிக்கவிட்டு வெளியான ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி பட டீசர்! வீடியோ உள்ளே.!

Summary:

rj balaji lkg movie teaser released

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும்  நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் சமீபகால அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம்.

மேலும் இப்படம்  பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் வெளியீட்டால் பிப்ரவரியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் சமீபத்தில் இதற்காக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  

இந்நிலையில்  ஆர்.ஜே.பாலாஜி இன்று நடைபெறும் இசைஞானி இளையராஜா 75 நிகழ்ச்சியில் எல்.கே.ஜி பட ட்ரைலர் வெளியாகவுள்ளதாக  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. 


Advertisement