சினிமா

கமலின் இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்! யார் தெரியுமா?

Summary:

RJ Balaji joining with indian movie part 2

2 . 0 வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனர் சங்கர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னையில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பிற்காக வெளிநாட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://cdn.tamilspark.com/media/16840lds-kamal_kajal.jpg

படத்தில் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்தியன் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபல நடிகர் RJ பாலாஜியும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RJ பாலாஜி நடித்திருக்கும் LKG படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இந்தியன் 2 வில் அவர் நடிக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://cdn.tamilspark.com/media/16840lds-RJBalaji_LKG_Poster_750.jpg


Advertisement