சினிமா

எல்.கே.ஜி பட போஸ்டருக்கு கிளம்பும் எதிர்ப்பு! சிம்பு ஸ்டைலில் பதிலடி கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.!

Summary:

rj balaji answered to admk man for lkg poster

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும்  நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் இப்படம்  பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் வெளியீட்டால் பிப்ரவரியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகவிருப்பதால் படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது. மேலும் குடியரசு தினத்தன்று முதல் பாடலை வெளியிடவுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் சமீபகால அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்பதால், அதன் போஸ்டரும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போஸ்டரை கண்ட அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர்  'படம் ரீலீஸ் ஆகட்டும் உன் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணிடுறேன்' என்று கமெண்ட் செய்திருந்தார் 

அவருக்கு பதிலடியாக "இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டாவா பண்ணி நம்ம மாஸ்- ஐ காமிங்க...!" என்று ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.Advertisement