தனுஷை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இளம்நடிகை! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

தனுஷை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இளம்நடிகை! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?


Rejisha vijayan going to act with vijay sethupathi

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சிறந்த பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கிறார். முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் இப்படத்திற்கு 800 என  தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rejisha vijayan

 மேலும் எம்.எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெஜிஷா விஜயன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு சினிமாக்காரன், பைனல்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.