இந்தியன் 2 வெளியாவதில் தாமதம் ஏன்?!கசிந்த உண்மை.!



Reason for indian movie late screening

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் "இந்தியன்". அப்போது இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இதில் கமலஹாசன் தந்தை - மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

indian2

இப்போது மீண்டும் 27ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதிலும் கமல் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.

லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது.

indian2

இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 2024 பொங்கலுக்கு இந்தியன் 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால் பட வெளியீடு இன்னும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.