சினிமா

நடிகர் கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் இருக்க இந்த பிரச்சினைதான் காரணமா? பிரபலம் வெளியிட்ட தகவல்!

Summary:

நடிகர் கவுண்டமணி சினிமாவில் நடிப்பவர்கள் இருப்பதற்கான காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனது வித்தியாசமான உடல் பாவனைகளாலும், காமெடியாலும்  ஏராளமான ரசிகர்களை பெற்று முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் காமெடிக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் கவுண்டமணி அவர்கள் செந்திலுடன் இணைந்து நடித்த வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுகிறது. நடிகர் கவுண்டமணி தற்போது பல காமெடி நடிகர்களுக்கு ரோல்மாடலாக உள்ளார். இந்நிலையில் 80 வயதாகும் நிலையில் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கவுண்டமணி படங்களில் நடிப்பதில்லை.

மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் நடிக்க மறுக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அவருடன் பல படங்களில் சேர்ந்து நடித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், அவருக்கு வயதாகி விட்டதால் குரல்வளம் குன்றிவிட்டதாலும், முகத்தின் வசீகரம் போனதாலும்தான் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூறியுள்ளார்


Advertisement