பாடகி சின்மயி சேலை கட்டாததற்கு பின்னாடி இவளோ ரகசியம் இருக்கா? இப்படியெல்லாம் கூடவா பேசுவார்கள்?

பாடகி சின்மயி சேலை கட்டாததற்கு பின்னாடி இவளோ ரகசியம் இருக்கா? இப்படியெல்லாம் கூடவா பேசுவார்கள்?


reason-behind-why-chinmayi-not-wear-saree

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறி, தமிழ் சினிமாவையே கதிகலங்க வைத்தவர் பாடகி சின்மயி. இந்நிலையில் பாலியல் குற்றம் கூறிய நாளில் இருந்து இன்று வரை தினமும் குறைந்த பட்சம் 15 பேராவது என்னை ’விபசாரி’ என்று விமர்சிக்கிறார்கள்  என்று சில நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தான் சேலை அணிவதால் என்னென்ன இன்னல்களை சந்திக்கிறேன் என்பது குறித்து கூறியுள்ளார். இது மிகவும் வெளிப்படையாகவும் பல ஆண்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவது போன்றும் அமைந்துள்ளது. 

chinmayi

சின்மயியின் ரசிகர் ஒருவர் அவரை புகழ்ந்து பின்வருமாறு கூறியுள்ளார், "நீங்கள் அருமையாக பாடுகிறீர்கள். உங்களின் வலிமை, அழகு, தன்நம்பிக்கை போன்றவை மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது. ஆனால் இதையெல்லாம் சிறப்பாக செய்யும் நீங்கள் இந்திய கலாச்சார உடையான சேலை அல்லது பிற உடைகளை அணிந்தால் நன்றாக இருக்கும். மேலும் இது மற்ற பெண்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே!" என பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, "நான் சேலை அணியும் போது சில ஆண்கள் என் இடுப்பு மற்றும் மார்பக பகுதிகளை புகைப்படமாக எடுத்து சில ஆபாச இணையதளங்களில் பதிவிட்டுவிடுகின்றனர். அந்த புகைப்படங்களை பார்த்து தாங்கள் எப்படி சுய இன்பம் அனுபவித்தோம் என்பதைக் குறித்து என்னிடமே பகிர்ந்துகொள்கின்றனர். இத்தகைய கீழ்தரமான ஆண்கள் இருப்பதால் தான் இந்தியாவில் பெண்கள் மேலிருந்து கீழ் முழுவதும் மறைக்க கூடிய உடை அணிய வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.