என்னாச்சு?.. திடீரென பிரபல மருத்துவமனைக்கு சென்ற ராஷ்மிகா மந்தனா.. இதுதான் காரணமா?.. டாக்டரின் அதிகாரப்பூர்வ தகவல்..!!

என்னாச்சு?.. திடீரென பிரபல மருத்துவமனைக்கு சென்ற ராஷ்மிகா மந்தனா.. இதுதான் காரணமா?.. டாக்டரின் அதிகாரப்பூர்வ தகவல்..!!


rashmika-mandhana-leg-problem

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கீதா கோவிந்தம், புஷ்பா, சுல்தான் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.36கோடி ரசிகர்கள் பின்தொடரும் நிலையில், தற்போது கூட தளபதியின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல மருத்துவமனைக்கு சென்ற ராஷ்மிகா பிரபல மருத்துவர் குரவ ரெட்டியை சந்தித்துள்ளார் 

Actress Rashmika

இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்த குரவ ரெட்டி, "அவர் 'சாமி சாமி' என்று முழங்காலில் முழுஎடையுடன் ஆடுவதால்தான் மூட்டு வலி வந்துள்ளது! என என்னிடம் வந்து ஸ்ரீவில்லியிடம் நகைச்சுவையாக சொன்னேன். 

புஷ்பா படம் தொடங்கியதும் நான் ராஷ்மிகாவை வாழ்த்த விரும்பினேன். அந்த சந்தர்ப்பம் அவரின் முழங்கால் வலியால் கிடைத்தது. விரைவில் அல்லு அர்ஜுனுக்கு தோள்பட்டை வலி வரும்" நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.