சினிமா

சோமுவை மச்சான்னு கூப்பிட்ட ரம்யாவின் தம்பி! இருவரும் ஜோடி சேர்வாகளா! அவரே கூறிய ஆச்சர்ய பதில்!!

Summary:

ரம்யா பாண்டியனின் தம்பி பரசு சோம் சேகரை மச்சான் என கூப்பிட்டது குறித்து பதில் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 முந்தைய சீசனை போலவே வாக்குவாதங்கள், மோதல் என  விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சுவாரசியமான Freeze டாஸ்க்  கொடுக்கப்பட்டது. அப்பொழுது போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் மற்றும் அவரது அம்மா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். அப்பொழுது அவர்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், அப்பொழுது பாலாஜியை பார்த்து பிரதர் என அழைத்த ரம்யா பாண்டியனின் தம்பி பரசு சோமை  பார்த்து ஹாய் மச்சான் என அழைத்தார். இதனை கண்ட ரசிகர்கள் செம ஷாக்கானர். 


இந்நிலையில் தொடர்ந்து  இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் சோம் குறித்து கேட்டதற்கு பரசு, சோம் சேகருடன் நேரத்தை கழித்தது நன்றாக இருந்தது. மிகவும் தங்கமான மனுஷன் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து சோம்சேகரின் ரசிகர் ஒருவர், அவர்கள் இருவரும் ஒன்று சேருவதை நீங்கள் விருப்புகிறீர்களா என்று கேட்டதற்கு அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் ரம்யா, சோம் இருவரும் நல்ல ஜோடிதான், சேர்ந்தா நல்லாதான் இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.


Advertisement