சினிமா

இடுப்பழகால் ரசிகர்களை கட்டியிழுத்த ஜோக்கர் பட நடிகைக்கு இப்படியொரு ஆசையா? ஓபன் டாக்கால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

ramya pandian like to act in gilli2 movie

 தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.

ஜோக்கர் படத்தை அடுத்து அவர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், வரும் வாய்ப்புகள் அனைத்தும் மாடர்னான கதாபாத்திரமாக இல்லாமல் வந்துள்ளது. 

இந்நிலையில் படவாய்ப்புக்காக அவர் சமீபத்தில் ஹாட்டான போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இடுப்பை காட்டும்வகையில் சேலை அணிந்துஅவர் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் வைரலாக பரவியது.திரைப்படத்தின் மூலம் பிரபலமானதைவிட அந்த ஒற்றை புகைப்படத்தின் மூலம் ரம்யா பாண்டியன் பெருமளவில் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில் அவர் தரணி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த கில்லி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் . கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து ஹீரோக்களுக்கு இணையாக பெருமளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement