பட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா! வைரலாகும் ஜோடி புகைப்படம்!! என்ன விசேஷம் தெரியுமா??

பட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா! வைரலாகும் ஜோடி புகைப்படம்!! என்ன விசேஷம் தெரியுமா??


ramya-and-balaji-participate-in-shop-opening-function

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் பாலா மற்றும் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் கடை திறப்பு விழாக்களுக்கும் அழைப்பு வருகின்றது.  இந்த நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு பாலாஜி மாப்பிள்ளை போல வேட்டி சட்டையிலும், ரம்யா பாண்டியன் அழகிய அரக்கு நிற புடவை அணிந்தும் கலந்துகொண்டுள்ளனர்.  இந்த நிலையில் அங்கு பெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டுள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் ரம்யா சிக்கிக் கொண்ட நிலையில் பாலாஜி அவரை பாதுகாப்பாக தாங்கிப் பிடித்து அழைத்து சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.